Mar 28

தற்போது சுதந்திரமாக செயற்படுகிறோம்; பொலிஸ்மா அதிபர்

நாட்டில் முன்பை விடவும் எம்மால் சுதந்திரமாக தற்போது செயற்பட முடியும். அதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் பூரண சுதந்திரம் வழங்கியுள்ளனர். இதன்பிரகாரம் யுத்தம் நிறைவடைந்த நாட்டில் பிரிவினைவாதத்திற்கு ஒருபோதும் இடமில்லை என பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர தெரிவித்தார்.

 

அத்துடன் நாட்டில்  சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிராக துஷ்பிரயோகங்கள்  தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றன. எனவே இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு பொலிஸாருக்கு பல்வேறு பணிப்புரை விடுக்கவுள்ளேன்.


ஆகவே சிறுவர் துஷ்பிரயோகம் செய்வோருக்கு கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 


தேசிய சிறுவர் பாதுகாப்பு கொள்கை வெளியீட்டு விழா பத்தரமுல்லை வோர்டர்ஸ் ஏஜ் ஹொட்டலில் இன்று நடைப்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே   அவர் இவ்வாறு தெரிவித்தார்.