Mar 28

கறுப்பு ஆடுகளை இனங்காண முடியும்; வெளிவிவகார அமைச்சர் மங்கள

யுத்தக் குற்றங்கள் தொடர்பான விசாரணை பொறி முறையின் இறுதி நிலை பாதிக்கப்பட்ட மக்களுக்கு  நீதி வழங்குவதாகவும் உலக நாடுகளின் நம்பகத்தன்மையை பாதுகாப்பதாகவுமே அமையும்.

அதே போன்று கறுப்பு ஆடுகளை அடையாளம் காணக்கூடியதாகவும் இருக்கும். எனவே 2 வருடகால அவகாசத்திற்கான செயற்திட்டம் விரைவில் முன்னெடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். 

சர்வதேச விசாரணைகளை வலியுறுத்தும் வடக்கின் அடிப்படைவாதிகள் விரைவில் மாற்றமடைவார்கள். ஏனெனில் வடக்கில் கண்ணீரில் வாடும் பெற்றோர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்.

இந்நிலையில் சர்வதேச நீதிபதிகள் தொடர்பில் தவறாக அர்த்தப்படுகின்றமை ஏற்றுக்கொள்ள கூடியதொன்றல்ல எனவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார். 

வெளிவிவகார அமைச்சில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மங்கள சமரவீர இவ்வாறு  தெரிவித்தார்.