Mar 28

ஜனாதிபதி பிறிதொரு பிரச்சினைக்கு வழிவகுக்கிறார்; முஜிபுர் எம்.பி

வடக்கில் தமிழ் மக்கள் தமது சொந்த நிலத்தை பெற்றுக்கொள்ள தொடர்ந்தும் போராடிக்கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு தீர்வொன்றை வழங்காத ஜனாதிபதி மற்றுமொரு சிறுபான்மையினமான முஸ்லிம்களின் பூர்வீகத்தை கையகப்படுத்தி பிறிதொரு பிரச்சினைக்கு வழிவகுக்கிறார். இது பெரும் அபாயகரமான சூழலாகும் என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கோரிக்கை விடுத்துள்ளார்.

மறிச்சிக்கட்டி மாவில்லு வெப்பல் விளாத்திக்குளம் பெரியமுறிப்பு உள்ளடங்கிய பகுதிகள் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த பகுதிகளாகும். அதற்கான ஆவனங்கள் பலவும் அங்குள்ள மக்களிடம் இருக்கின்றன.

 இது குறித்து ஜனாதிபதி பரிசீலிக்காது ஜனாதிபதி தீர்மானம் எடுத்திருப்பதும் மிகவும் தவறானதாகும். அவர் கையொப்பமிட்ட வர்த்தமானி அறிவித்தலை வாபஸ்பெற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.