Jul 26

வெலிக்கடை படுகொலையின் 34 வது நினைவேந்தல் நிகழ்வு

வெலிக்கடைச் சிறைப் படுகொலையின் 34வது நினைவேந்தல் நிகழ்வு நேற்றுசெவ்வாய்க்கிழமை பிற்பகல் 5.30 மணியளவில் நல்லூரில் அமைந்துள்ள திலீபன் நினைவு தூபி முன்றலில் நடைபெற்றது.

வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன், கஜதீபன், சிவநேசன் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் உயிரிழந்தவர்களுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதோடு மலரஞ்சலியும் இடம்பெற்றது.