Mar 28

கண்டியில் சுதந்திரக் கட்சியின் மேதினக் கூட்டம்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மேதினக்கூட்டத்தை இம்முறை  கண்டியில் நடத்துவதற்கு  கட்சி தீர்மானித்துள்ளது என பெற்றோலிய வள அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.

பெற்றோலிய வள அமைச்சில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவர் தொடர்ந்து கூறுகையில்,

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பலம்மிக்க பயணத்தை மேற்கொண்டு செல்லும் நிலையில் எதிர்வரும் மேதினத்தை கண்டி பெட்டம விளையாட்டு மைதானத்தில் நடத்த கட்சி ஏகமனதாக தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் தொழில் சங்க அமைப்புகளை   எங்களுடன் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.