Jul 25

ஒரோமொக்டோவில் சமூக ஒற்றுமைக்கான ஒன்றுகூடல் நிகழ்வு

பல்வேறு தேசிய சமூகத்தினரை ஒன்றிணைத்து நடத்தப்படும் சமூக ஒன்றுகூடல் நிகழ்வான பவ் வோவ் (Powwow) கனடாவின் ஒரோமொக்டோ நகரில் இவ்வார இறுதியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பல பகுதிகளிலிருந்து பல்வேறு கலாசாரங்களை பின்பற்றும் மக்கள் ஆர்வமாக வந்து கலந்துக் கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வானது, சமூகங்களிடையிலான ஒற்றுமை, கலாசாரம், மொழி, நடனம் மற்றும் நட்பு என்பவற்றை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளதாக சிரேஷ்ட குடிமக்கள் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்ட ஒருநாள் நிகழ்வு மிகவும் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், இம்முறையும் இந்நிகழ்வை நடத்த திட்டமிடப்பட்டதாக ஒரோமொக்டோ முதலமைச்சர் ஷெலி சபாடிஸ் குறிப்பிட்டார்.

சமூகங்களிடையே ஒற்றுமை உணர்வை வலியுறுத்துவதே இந்நிகழ்வின் முக்கியத்துவம் என்றும், இதன்மூலம் ஒருவருக்கொருவர் மரியாதையுடன் நடந்துக் கொள்வதை உறுதிபடுத்த வேண்டும் என்றும் மூத்த பிரஜையொருவர் குறிப்பிட்டார்.