Mar 28

மு.கா. முன்னாள் தவிசாளரிடம் விசாரணை

ஸ்ரீ லங்கா முஸ்லிம் கனக்கிரஸின் முன்னாள் தவிசாளர் பசீர் சேகுதாவூத்திடம் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு விஷேட விசாரணை ஒன்றினை முன்னெடுத்தது.  

 

பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம். சல்மான் ஆகியோர் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் செய்த முறைப்பாடுகள் மீதான விசாரணைகள் தொடர்பிலேயே இன்று சுமார் மூன்று மணி நேரம் வரையில் இந்த விசாரணைகள் நடத்தப்பட்டன.

 

தெமட்டகொடையில் உள்ள கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் தலைமையகத்துக்கு அழைக்கப்பட்டு அங்கு வைத்தே பசீர் சேகுதாவூத்திடம் இவ்விசாரணைகள் நடத்தப்பட்டன.

 

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிசாந்த சொய்ஸா, உதவி பொலிஸ் அத்தியட்சர் சந்ரதிலக மற்றும் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நெவில் டி சில்வா ஆகியோரின் கட்டுப்பாட்டில் இந்த விசாரணைகள் இடம்பெற்றன.

 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகமான தாருஸ்ஸலாம் தொடர்பில் ‘தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள்’ எனும் நூலொன்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தாருஸ்ஸலாம் மீட்பு முன்னணி எனும் அமைப்பினால் வெளியிடப்பட்டிருந்தது.