Jul 25

ஸ்காபரோவில் துப்பாக்கிச் சூடு: ஐவர் காயம்!

ஸ்காபரோவில் உள்ள மதுபான விடுதி ஒன்றில் நேற்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விக்டோரியா பார்க் அவனியூ மற்றும் எல்ஸ்மெயர் வீதியில் அமைந்துள்ள மதுபான கேளிக்கை விடுதி ஒன்றின் உள்ளே நேற்று அதிகாலை 2.30 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது காயமடைந்தவர்களில் மூவர் அந்த மதுபான விடுதியின் உட்பகுதியில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட வேளையில், ஏனைய இருவர் தாமாகவே மருத்துவமனைக்கு சென்று சேர்ந்ததாக காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

குறித்த ஐந்து பேருக்கும் உயிராபத்து இல்லை என்று முதலில் கூறப்பட்ட போதிலும், ஒரு சிலரின் நிலைமை மோசமாக உள்ளதாகவும், அவர்கள் அவசர சத்திரசிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் பிந்திக்கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.