Mar 28

யாழ். இந்துக் கல்லூரி மாணவன் அபிநந்தன் தேசிய மட்டத்தில் சாதனை

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி தேசிய மட்டத்தில் சாதனை படைத்துள்ளது. நேற்று வெளியாகிய கல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதரணதரப் பரீட்சையில் நீண்ட காலத்தின் பின் தேசிய ரீதியில் ஐந்தாம் இடத்தினையும் தமிழ் மொழிமூல பரீட்சார்த்திகளில் முதலாம் இடத்தினை செல்வன் அருளானந்தன் அபிநந்தன் பெற்றுள்ளார்.

இவர் இந்தியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் நடைபெற்ற சர்வதேச கணித, விஞ்ஞான ஒலிம்பியாட் கனிஷ்ட பிரிவுப் போட்டியில் பங்கு பற்றி சாதனை படைத்து வெற்றிவாகை சூடியவர்.

யாழ் சிராம்பியடியை சேர்ந்த இம்மாணவன் குடும்ப சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் மிகுந்த ஊக்கத்துடன் படித்ததால் இந்த வெற்றியை தாம் பெற முடிந்ததாகவும்  மேலும் தனது பெற்றோர் மற்றும் சித்தியின் ஊக்கமளிப்பினால் தான் சிறந்த பெறுபேற்றை பெற்றுக்கொண்டதாக தெரிவித்ததுடன் அதேவேளை, தனது வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் குறித்த மாணவன் நன்றிகளை தெரிவித்துள்ளார்.