Feb 28

காணாமல்போனோரைத் தேடும் உறவுகளின் போராட்டங்கள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை ஒப்படைக்குமாறு கோரி அவர்களது உறவுகள் கிளிநொச்சி மற்றும் வவுனியாவில் முன்னெடுத்துள்ள போராட்டங்கள் தொடர்கின்றன. 

காணாமல்போனோரைத் தேடும் உறவுகளின்  போராட்டம் கிளிநொச்சியில் 10ஆவது நாளாகவும்இ வவுனியாவில் 6ஆவது நாளாகவும் இந்தப் போராட்டங்கள் இன்று புதன்கிழமையும் தொடர்கின்றன. 

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் கிளிநொச்சி மாவட்டத்தில் போர் இடம்பெற்ற காலத்தில் வலிந்து காணாமற்போனவர்கள்இ கடத்தப்பட்வர்கள்இ அரசியல் கைதிகள் மற்றும் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் ஆகியோரின் விடுதலைஇ அவர்கள் பற்றிய தெளிவான வெளிப்படுத்தல் என்பவற்றை வலியுறுத்தி இரவு - பகல் பாராது உறவுகள் இந்தத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் அரசியல் கைதிகளுக்கு நீதி வழங்குமாறு கோரி  ஜனாதிபதிக்கு ஆயிரம் தபால்களை அனுப்பும் கவனயீர்ப்புப் போராட்டமும்; வவுனியாவில் நடைபெற்றது.