Mar 28

அவுஸ்திரேலியாவை தாக்கியது டெபி சூறாவளி

வட கிழக்கு அவுஸ்திரேலியாவை  செவ்வாய்க்கிழமை தாக்கிய பாரிய டெபி சூறாவளி காரணமாக  பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளதுடன் மரங்கள் பலவும் சரிந்து விழுந்துள்ளன.

அத்துடன்  பல்லாயிரக்கணக்கான மக்கள் மின்சார துண்டிப்பை எதிர்கொண்டுள்ளனர்.

 மேற்படி சூறாவளியானது  மணிக்கு 263  கிலோமீற்றர் வேகத்தில் நகர்ந்து  வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

 இந்நிலையில்  மேற்படி சூறாவளியால் ஏற்பட்ட சேதவிபரங்கள் குறித்து உடனடியாக மதிப்பிட முடியாதுள்ளதாக  குயீன்ஸ்லாந்து பொலிஸ் ஆணையாளர் அயன் ஸ் ரீவார்ட் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த அனர்த்தம் தொடர்பில் துரிதமாக பணிகளை முன்னெடுக்க  நடவடிக்கை எடுத்துள்ளதாக  அந்நாட்டுப் பிரதமர் மல்கொம் டேர்ன்பல்  கூறினார்.

 இந்த சூறாவளியால் பூங்காவொன்றில்  குறைந்தது 50  மரங்கள் வரை சரிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.