Mar 28

பிரான்ஸின் பாரிஸ் நகரில் வன்முறை ஆர்ப்பாட்டம்

பிரான்ஸின் பாரிஸ் நகரில்  சீனப் பிரஜையொருவர் அந்நாட்டு பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டமை குறித்து நேற்று முன்தினம்  திங்கட்கிழமை  பாரிய ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.

பாரிஸ் நகரிலுள்ள  பொலிஸ் நிலையத்துக்கு  வெளியே கூடி  மேற்படி   ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் பொலிஸாருக்குமிடையில் உக்கிர மோதல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது இடம்பெற்ற மோதலில் பொலிஸார் தரப்பில் மூவர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 35  பேருக்கும் அதிகமானோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.  மேற்படி ஆர்ப்பாட்டத்தில் சுமார் 250  பேர் வரை ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

 லியு  ஷவோயோ என்ற குறிப்பிட்ட சீனப் பிரஜை வீட்டு வன்முறையொன்ற தொடர்பில்  அவரை பொலிஸார் விசாரிக்கச் சென்ற போது  அவர்  பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக பொலிஸார் கூறுகின்ற நிலையில்அந்தக் குற்றச்சாட்டுக்கு அவரின் குடும்பத்தினர் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.