Mar 28

மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி கட்சித் தலைவர் பதவியிலிருந்து வெளியேற்றம்

மாலைதீவு ஆளும் கட்சியானது  அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மௌமூன் அப்துல் கயூமை அந்தக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து  பணிநீக்கம் செய்துள்ளது.

 தற்போது ஆட்சியிலுள்ள தனது சகோதரர் முறையான   அப்துல்லா யமீனுக்கு எதிராக தோல்வி கண்ட சதிப் பரட்சியொன்றுக்கு தலைமை தாங்கியதையடுத்தே அவரது பணி நீக்கம் இடம்பெற்றுள்ளது.

 எதிர்க்கட்சித் தலைவரான  மொஹமட் நஷீத்  அரசாங்கத்திற்கு எதிராக பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பொன்றை முன்னெடுக்க  தனது ஆதரவாளர்களை ஊக்குவிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையிலேயே  மௌமூன் அப்துல் கயூமின் பணி நீக்கம் இடம்பெற்றுள்ளது.

அப்துல்லா யமீன் ஆளும் கட்சியின் கட்டுப்பாட்டை அண்மையில் கைப்பற்றியிருந்தார். எனினும்  அந்தக் கட்சியின் நியமிக்கப்பட்ட தலைவராக மௌமூன் அப்துல் கயூமே இதுவரை காலமும் இருந்து வந்தார்.