Mar 28

மேம்படுத்தப்பட்டது பேஸ்புக் லைவ் வசதி பேஸ்புக்

பேஸ்புக்  லைவ் வசதி முதற்கட்டமாக ஸ்மார்ட்போன் மற்றும் பேஸ்புக் பேஜ்களுக்கு மட்டும் வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்சமயம் பேஸ்புக் லைவ் அனைவருக்கும் வழங்கப்பட்டு விட்டது.

இதனால் பேஸ்புக் பயன்படுத்துவோர் கணினிகளில் இருந்து நேரலை வீடியோக்களை ஒளிபரப்புச் செய்ய முடியும்.  

பேஸ்புக்கின் இந்த வசதி மூலம் வெப்கேமரா கொண்டு யார் வேண்டுமானாலும் பேஸ்புக் லைவ் வீடியோக்களை ஒளிபரப்புச் செய்ய முடியும். இந்த நடவடிக்கையானது பேஸ்புக் லைவ் வீடியோ மற்றும் வீடியோ சேவைகளுக்கு பேஸ்புக் வழங்கும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. 

டெஸ்க்டாப் மூலம் லைவ் வீடியோக்களை ஒளிபரப்புச் செய்ய லைவ் வீடியோ என்ற பெயரில் புதிய பட்டன் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.