Mar 28

விரைவில் புதப்பித்த சம்சங் கேலக்ஸி நோட் 7

சம்சங் நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்ட ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான கேலக்ஸி நோட் 7 பற்றரியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக  திடீர்திடீர் என வெடித்தது.

இதனால் இரண்டே மாதங்களில் நோட் 7 சர்வதேச விற்பனை நிறுத்தப்பட்டு, விற்பனை செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களும் திரும்ப பெறப்பட்டன. 

இந்நிலையில் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன்களை புதுப்பித்து மீண்டும் விற்பனை செய்ய இருப்பதாக சம்சங் அறிவித்துள்ளது. 

சம்சங் நிறுவனத்தின் நோட் 7 ஸ்மார்ட்போனிற்கான பற்றரியை சம்சங் எஸ்.டி.ஐ.கோ லிமிட்டெட் மற்றும் அம்பெரெக்ஸ் டெக்னாலஜி லிமிட்டெட் ஆகிய நிறுவனங்கள் தயாரித்து வழங்கின.  

சம்சங் நிறுவனம் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுகளில் நோட் 7 பற்றரியைத் தவிர இதர பாகங்களில் எவ்வித கோளாறும் இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட நோட் 7 விற்பனை மூலம் சம்சங் சந்தித்த இழப்புகளை ஈடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.