Jul 12

தோட்ட நிர்வாகங்கள் மரங்களை வெட்டுவதில் காட்டும் அக்கறை தேயிலை பயிர் செய்கையை விருத்தி செய்வதில் காட்டுவதில்லை பொது மக்கள் குற்றச்சாட்டு

தொன்று தோட்ட மக்களுக்கும் இந்த நாட்டிற்கும் பெருந் தொகையான வருமானத்தினை ஈட்டித் தந்தது பெருந்தோட்டத் துறையாகும்.பெருந்தோட்டத்துறை இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் முதுகெலும்பாக விளங்கியது.இந்த துறையினால் பெருந்தோட்டங்களைச் சேர்ந்த சுமார் லட்சக்கணக்கான மக்கள் தங்களது ஜீவன உபாயமாக இந்த பெருந்தோட்டங்களையே நம்பி வாழ்ந்தனர்.குறிப்பாக தேயிலை பயிர் செய்கையினை அதிகமான தொழிலாளர்கள் நம்பியிருந்தனர்.காலமாக தோட்ட மக்களுக்கு உணவளித்து வந்த இந்த தேயிலை பயிர்ச்செய்கை தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவதனை அவதானிக்க முடிகின்றது.
அரசாங்கம் பொறுப்பிலிருந்து பெருந்தோட்டத்துறை கம்பனிகளிடம் ஒப்படைக்கப்பட்டதன் விளைவாக இன்று ஒரு சமூகமே தொழிலிழிக்கும் நிலைக்கு சிறிது சிறிதாக தள்ளப்பட்டுப்பட்டு வருகின்றனர்.இது வரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தேயிலை தொழிற்சாலைகள் மூடப்பட்டு அந்த தொழிந்சாலைகளில் வேலை செய்து வந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தொழில்களை இழந்துள்ளனர்.
இன்னும் பலர் தேயிலையின் மூலம் தங்களது வாழ்வாதாரத்தினை பூர்த்தி செய்து கொள்ள முடியாமையினால் தோட்டங்களை விட்டு தொழிலாளர்கள் வெளியேறிய வண்ணமே உள்ளனர்.
இதனால் பல தோட்டங்கள் மூடு தருவாயினை எற்றிவருகின்றனர். இவற்றிக்கெல்லாம் காரணம் தொழிலாளர்கள் தேயிலை தொழிலில் ஈடுபட விருப்பமின்றி இருப்பதாக தோட்ட நிர்வாகங்கள் தெரிவித்து வந்த போதிலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையே காணப்படுகின்றன.காரணம் இன்று தொழிலாளர்களில் அதிகமானவர்கள் தோட்டங்களில் வெளியேறி ஆயிரம் ரூபா சம்பளத்திற்காக தனியார் தோட்டங்களில் வேலை செய்து வருகின்றனர்
அவர்களுக்கு பகல் உணவு மற்றும் போக்குவரத்து வசதிகள் தனியார் தோட்டங்கள் செய்து கொடுகின்றனர்.அவ்வாறு தனியார் தோட்டங்கள் செயப்படும் அதே வேளை கம்பனிகளுக்கு சொந்த மான தோட்டங்கள் நாளாந்தம் தொழிற்சாலைகளை மூடுவதும் தேயிலை மலைகளை காடுகளாக மாற்றிவருவதனையே காணக்கூடிய தாக உள்ளது.'பச்சை கம்பளம் விரித்தாற் போல்' கவிஞர்களால் வர்ணிக்கப்பட்ட தேயிலை மலைகள் பச்சை காடுகளாக மாறி வருகின்றன.ஆறுகள் ஓடைகள்,அருவிகள் என பாய்ந்தோடிய அழகிய மலையகம் என்று உலக மக்களால் வர்ணிக்கப்பட்ட பிரதேசம் இன்று செழிப்பிழந்து காணப்படுகின்றன.இவற்றிக்கெல்லாம் காரணம் என்ன?என்பது அனைவரதும் கேள்வியாகவே உள்ளன.
நாட்டிக்கு வருமானத்னையும் வீட்டிக்கு உணவினையும் சூழலுக்கு அழகினையும் தேடித்தந்தது. நன்கு செழித்து வளர்ந்த தேயிலையே. ஆனால் இந்த அழகிய தேயிலை இன்று கவனிப்பார் அற்ற நிலைக்கு தள்ளப்பட்டு வருவது நாட்டுப்பற்றுள்ள அனைவர் மனதினையும் புன்படுத்தும் விடயமாகும்.பெருந்தோட்டங்களை நிர்வகிக்கின்ற நிர்வாகங்கள் இன்று இவற்றைப்பற்றி அக்கறை கொள்வதில்லை என்றால் அது பிழையாகாது காரணம் தோட்ட நிர்வாகங்கள் முற்று முழுவதுமாக லாபத்தினை மாத்திரம் நோக்காக கொண்டு இயங்குகின்றன.
அதனால் தொழிலாளர்களின் நலனபுரி விடங்களிலும் அக்கறை செலுத்துவதில்லை. தோட்டங்ளை மேம்படுத்துவதிலும் அக்கறை செலுத்துவதில்லை.இதனால் தோட்டங்கள் தொடர்பாக தொழிலாளர்களுக்கும் பற்றுதல் அற்ற நிலையே காணப்படுகின்றன.
பெரும்பாலான தோட்டங்கள் தேயிலை துறையினை காப்பதற்கு பதிலாக அத்தோட்டங்களில் நெட்டு வளர்ந்த மரங்களை வெட்டித்தீர்ப்பதிலேயே கூடுதலான அக்கறை கொள்வதனை அண்மைக்காலமாக காணக்கூடியதாக உள்ளது,அதிகமான தோட்டங்களில் காணப்படும் நூற்றுக்கணக்கான மரங்கள் நாளாந்தம் வெட்டப்படுகின்றன.இதன் பின் விளைவு பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கணத்த ஓசையுடன் பாய்த ஆறுகள் ஆருவிகள் இன்று வீரியமின்றி காணப்படுகின்றன.நிறைவாக காணப்பட்டு நீரூற்றுக்கள் அற்றுப்போய் உள்ளன.இதனை நம்பி விவசாயத்தில் ஈடுபட்டவர்கள். இன்று செய்தறியாது திகைத்து நிக்கின்றனர்.வருடந்தோறும் வந்த பருவமழை மாறி பொழிகின்றன.வரட்சி மக்களைவ வாட்டி எடுக்கின்றன.
நாட்டின் பொருளாதாரத்திற்கும் வீடுகளுக்கும் ஒளியேற்றுவதற்காக பயன்படுத்தப்படும் நீர்த்தேக்கங்கள் நீரின்றி வற்றிப்போயுள்ளன. கோடிக்கணக்கில் செலவு செய்து மின்சார சபைக்கு வலு சேர்த்த சிறிய நீர் மின் உற்பத்தி நிலையங்கள் நீரின்றி போதிய வருமானம் இல்லாததனால் கைவிடப்பட்டுள்ளன.மரங்கள் தறித்த பின் தேயிலை மலைகள் பெரும்பாலும் கவனிப்பாரற்று காணப்படுவதனால் பற்றைகாடுகளாக மாறி வருகின்றன.இதனால் வனப்பகுதியில் வாழ்ந்த கொடிய மிருகங்கள் இன்று மக்கள் வாழ்விடங்களுக்கு சமீபமாக வந்துள்ளன.அடர்ந்த பிரதேசங்களில் வாழ்ந்த குளிவிகள் தேயிலை செடியில் தமது வாழ்விடத்தினை மாற்றிக்கொண்டுள்ளன.இதனால் நாளாந்தம் பல தொழிலாயர்கள் சிறுத்தை குளவி தாக்குதலுக்கு இலக்காகி வருகின்றன.பலர் தமது உயிரினையும் தியாகம் செய்துள்ளனர்.குடிநீருக்காகவும் ஏனைய தேவைகளுக்காகவும் மக்கள் அலைந்து திரியும் நிலையும் அவல நிலை ஏற்பட்டு வருகின்றன.
அரசாங்கம் மரம் வெட்டுவதற்காக பல சட்டங்கள் கொண்டு வரப்பட்ட போதிலும் மலையகப்பகுதியில் அவை வலுவற்றதாக உள்ளன.
உலகத்தில் புவி வெப்பமடைதலை தடுப்பதற்காக சுமார் பில்லியன் கணக்கான மரங்களை நாட்ட வேண்டும் என ஆய்வுகள் வெளியிட்டு வரும் நிலையில் மரங்களை பாதுகாப்பதற்காக நாட்டின் ஜனாதிபதி பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் மலையகப்பகுதிகளில் மாத்திரம் மரங்கள் தறிப்பது சரியா என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.இதே வேளை அண்மையில் பெருந்தோட்டத்துறை ராஜங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் அவர்கள் தோட்டங்களில் உள்ள மரங்களை தறிப்பதென்றறால் அமைச்சின் அனுமதியினை பெற வேண்டும் என்றார். அப்படியானல் தற்போது வெட்டப்படும் மரங்கள் அனுமதி பெற்ற பின் வெட்டப்பட்ட மரம் தானா அல்லது தன் இஸ்ட்டம் போல் வெட்டித்தள்ளுகிறார்களா? என்பதும் கேள்வியாக இருக்கும் அதே தொழிற்சங்கங்கள் தமது பிரதேசம் சூழல்,தொழிலாளர்களின் பாதுகாப்பு,போன்றவற்றில் இதை விட அக்கறை செலுத்த வேண்டும் என்பதும் அனைவரதும் எதிர்ப்பார்ப்பாகும்.