Jul 24

வீதியோரத்தில் சடலமாக மீட்கப்பட்டவர் 28 வயது பிரம்டன் பெண்!

வெள்ளிக்கிழமை பிற்பகல் பிரம்டன் பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம் தொடர்பிலான விபரத்தினை பீல் பிராந்திய காவல்துறையினர் நேற்று பிற்பகல் வெளியிட்டுள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் பிரம்டன் பகுதியைச் சேர்ந்த 28 வயதான காரா கிளார்க்(Kara Clark) என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த அந்த பெண்ணின் சடலம் காசில்மோர் வீதி மற்றும் ஹம்பர் வெஸ்ட் பார்க்வே பகுதியில் நேற்று முன்தினம் மாலை 2.36 அளவில் கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட அந்தப் பெண் கடந்த 18ஆம் நாள் செவ்வாய்க்கிழமை காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை அதிகாலை ஒரு மணியளவில், அதே பகுதியில் உள்ள வீட்டில் இருந்து வெளியேறிச் சென்ற அவரை பின்னர் காணவில்லை என்று முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையிலேயே, மூன்று நாட்களின் பின்னர் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பீல் பிராந்திய காவல்துறையினர், மனித கொலை தொடர்பிலான சிறப்பு விசாரணைப் பிரிவினர் மற்றும் காணாமல் போனோர் தொடர்பிலான விசாரணை அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.