Mar 28

ஆஸி.க்கு எதிரான தொடரைக் கைப்பற்றியது இந்தியா

அவுஸ்திரேலிய இந்திய அணிகளுக்கிடையிலான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று தொடரையும் தனாக்கியுள்ளது.

தர்மசாலாவில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 300ஓட்டங்களை பெற்றது.

அணித்தலைவர் ஸ்டீபன் ஸ்மித் (111) சதமடித்தார்.  பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுக்களையும் உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா தனது முதல் இன்னிங்ஸில்  332ஓட்டங்களைப் பெற்று சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. 

அவுஸ்திரேலிய பந்து வீச்சில் சுழற்பந்து வீச்சாளர் நெதன் லையன் 5 விக்கெட்டுகளையும் பற் கம்மின்ஸ்  3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். 

32 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த  அவுஸ்திரேலியா 137 ஓட்டங்களுகளைப் பெற்று சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

 இந்திய பந்துவீச்சில்   ஜடேஜா, உமேஷ் யாதவ் மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பெற்றினர்.106ஓட்டங்களை  எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ஓட்டங்களை எடுத்திருந்தது. 

நான்காம் நாளான இன்று இரண்டு விக்கெட்டுக்களை மட்டுமே பறிகொடுத்து இந்தியா வெற்றி பெற்று தொடரைத் தனதாக்கியது.  ரஹானே 38ஓட்டங்களையும், லோகேஷ் ராகுல் 51ஓட்டங்களையும் பெற்று வெற்றியை உறுதி செய்தனர்.  

இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றதோடு போட்டியின் தொடர் ஆட்டநாயகனாகவும், ஆட்ட நாயகனாகவும் தெரிவானார்.