Jul 11

இன்றைய ராசிபலன் (07.11.2019)

  • மேஷம்

    மேஷம்: தன் பலம் பலவீனத்தை உணருவீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பாராத நன்மை கிட்டும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.  

  • மிதுனம்

    மிதுனம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் வருங்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். 

  • கடகம்

    கடகம்: எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள்.  

  • சிம்மம்

    சிம்மம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். உறவினர் கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்தும் தருவார்கள். மாறுபட்ட அணுகுமுறையால் முன்னேறும் நாள். 

  • கன்னி

    கன்னி: கணவன்-மனைவிக் குள் அன்யோன்யம் பிறக்கும். அழகு, இளமைக் கூடும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மனசாட்சிப்படி செயல்படும் நாள்.   

  • துலாம்

    துலாம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு அலைச்சல் வந்து நீங்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் அதிருப்தி உண்டாகும்.  

  • விருச்சிகம்

    விருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். உறவினர்களுடன் மனத்தாங்கல் வரும். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப்பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்துச் செல்லும். போராடி வெல்லும் நாள். 

  • தனுசு

    தனுசு: ஆன்மிகப் பெரியோ ரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகள் பலிதமாகும். 

  • மகரம்

    மகரம்: சொன்ன சொல்லைக் காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். உறவினர், நண்பர்களால் அனுகூலம் உண்டு. நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார்.  வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.  

  • கும்பம்

    கும்பம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.   

  • மீனம்

    மீனம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். அநாவசியமாக அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிட வேண்டாம். வீண் பழிக்கு ஆளாவீர்கள். யாரையும் யாருக்கும் நீங்கள் சிபாரிசு செய்ய வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு.