Jul 24

கறுப்பூலை நினைவேந்தல் நிகழ்வுகள்

1983ஆம் ஆண்டு யூலை 23ஆம்திகதி கொழும்பிலும் நாட்டின் தென்பகுதிகளிலும் வாழ்ந்த தமிழ் மக்கள் மீது சிங்களக் காடையர்கள் மேற்கொண்ட திட்ட மிட்ட கொலைவெறித்தாக்குதலில் ஆயிரத்திற்கும் அதிகமாகோர் படுகொலை செய்யப்பட்டதுடன், அதேயளவானோர் படுகாயமடைந்தனர்.

நூற்றுக் கணக்கான பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட பின்னர் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். வெலிக்கடைச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் 54பேர் கொடூரமான முறையில் சிங்களக் காடையர்களால் கொல்லப்பட்டனர். 

இச் சம்பவத்தின் 34ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பிலும் யாழ்ப்பாணத்திலும் இடம்பெற்றது.