Mar 28

ஒரு வாரத்துக்குள் அமைச்சரவையில் மாற்றம்: ஜனாதிபதி - பிரதமர் ஆலோசனை

அமைச்சரவையில் முக்கிய மாற்றம் ஒன்று அடுத்த வாரத்தில் இடம்பெறும் எனவும், இதன்போது உயர் கல்வி அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்லை நீதி அமைச்சராக நியமிக்கப்படலாம் எனவும் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ இதன்போது கல்வி அமைச்சராக நியமிக்கப்படுவார். 

அமைச்சரவை மாற்றம் ஒரு சில தினங்களில் இடம்பெறலாம் எனவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஏற்கனவே பேச்சுக்களை நடத்தியிருக்கின்றார். தற்போதும் ஆலோசனைகள் இடம்பெற்றுவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இறுதிவேளையில் மேலும் சில மாற்றங்கள் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

ஐ.தே.க.வும் ஶ்ரீல.சு.க.வும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்த பின்னர் இடம்பெறும் முதலாவது அமைச்சரவை மாற்றம் இதுவாகும். குறிப்பிட்ட இரு அமைச்சர்களைத் தவிர மேலும் சில அமைச்சர்களின் பதவிகளிலும் மாற்றங்கள் இடம்பெறலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.