Jul 08

மனைவியைத் தூக்கிக்கொண்டு ஓடி சாதனை படைத்த கணவன்!

மனைவியைத் தூக்கிக்கொண்டு ஓடும் உலகப் போட்டியில் லித்துவேனியாவைச் சேர்ந்த தம்பதி இரண்டாம் முறையாக வென்றுள்ளனர். 

மனைவியைத் தோளில் சுமந்து தடைகளைத் தாண்டி ஓடுவதே போட்டி. 

4,000 பேர் வாழும் சிறிய கிராமத்தில் ஒவ்வோர் ஆண்டும் உலகெங்கும் உள்ள போட்டியாளர்கள் திரளாகப் பங்கேற்கின்றனர். 

போட்டியில் வெற்றியாளர்களுக்குப் பரிசு, மனைவியின் எடைக்கு நிகரான பீர். 

மனைவியைத் தூக்கிக்கொண்டு ஓடும் வழக்கம் ஃபின்லந்தில் 19ஆம் நூற்றாண்டில் தொடங்கியது. 

ஆண்கள் தங்கள் வலிமையைக் காட்ட மனைவிகளைத் தூக்கிக்கொண்டு ஓடுவது முதலில் ஆரம்பித்தது.