Jul 22

வவுனியாவில் இடம்பெற்ற அமுதவிழா

வவுனியாவில் இந்துமாமன்றம் மற்றும் மணிவாசகர் சபையின் தலைவர் வை.செ.தேவராசா அவர்களின் 80ஆவது அகவை அமுதவிழா இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது.

வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் தலைவர் தமிழ்மணி அகளங்கன் தலைமையில் வவுனியா கந்தசாமி கோவில் திருமண மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசாவும், முன்னிலை அதிதியாக கலாகீர்த்தி உடுவை எஸ்.தில்லைநடராஜா கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது அமுதவிழா நிகழ்வில் ‘தேவஅமுதம்’ என்ற நினைவுமலர் வெளியீட்டு வைக்கப்பட்டது. வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம், வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் நிகழ்வில் கலந்துக் கொண்டிருந்தனர்.