Mar 28

ஜெனீவா தொடர் இம்முறை தமிழர் தரப்புக்கு சவால் நிறைந்ததாக இருந்தது; அனந்தி சசிதரன்

ஜெனீவாவில் இம்முறை வட புலத்து முஸ்லிம்களை களமிறக்கியதன் பின்னணி என்னவென்பது புதிராக இருந்ததாக வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த காலத்தைபோல் அல்லாது இம்முறை கோதாபயவின் நண்பரும் முன்னாள் கடற்படை அதிகாரியுமானவர் களமிறக்கப்பட்டிருந்தார். அவருடன் வந்தவர்கள் தமிழ் மக்கள் சார்பாக செயற்பட்டவர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டனர். ஒட்டு மொத்தத்தில் இம்முறை ஜெனீவா அமர்வு தமிழ் மக்கள் சார்பில் செயற்பட்டவர்களுக்கு சவாலாகவே இருந்தது.

ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் பங்குகொண்டு விட்டு ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பிய அனந்தி சசிதரனிடம் அங்குள்ள நிலைமை தொடர்பில் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.