Feb 28

கேப்பாப்பிலவு மக்களின் காணிகள் இன்று விடுவிப்பு

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள  கேப்பாபிலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் காணிகள் இன்று புதன்கிழமை விடுவிக்கப்படவுள்ளன என்று கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் சி.குணபாலன் தெரிவித்தார்.

கேப்பாப்பிலவு – பிலக்குடியிருப்பு மக்கள் கடந்த மாதம் 31ஆம் திகதியிலிருந்து  இரவு - பகலாக வீதியில் விமானப்படை முகாம் முன்பாக அமர்ந்திருந்து தொடர்ந்து போராடி வருகின்றனர். 

இதற்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டங்கள் மற்றும் ஜனாதிபதியுடன் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நடத்திய பேச்சுக்களை நடத்தியிருந்தனர். 

அதற்கமைய புதன்கிழமை முற்பகல் 11 மணியளவில் இம்மக்களின் காணிகள் அனைத்தும் உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்படும் என்று கேப்பாப்பிலவு - பிலக்குடியிருப்பு  விமானப்படை தளபதி பில் கொமாண்டர் பிரியதர்சன தொலைபேசி மூலம் என்னைத் தொடர்புகொண்டு குறிப்பிட்டுள்ளார். 

விமானப் படையினர் வசமிருக்கும் காணிகளை நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் நேற்று செவ்வாய்க்கிழமை காலை அளவீடு செய்தனர் கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் சி.குணபாலன் மேலும் தெரிவித்தார்.