Mar 28

வெலிக்டை சிறையிலுள்ள விமல் வீரவன்சவுக்கு வைத்தியர்கள் எச்சரிக்கை

வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விமல் வீரவன்ச எம்.பி, தண்ணீரை மட்டுமே பருகினால் அவருடைய சிறுநீரகங்கள் மற்றும் குடல் ஆகியவை குணப்படுத்த முடியாத அளவுக்குப் பாதிப்படைந்து விடும் என்று, வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் குத்தித்துள்ள, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்சவை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் சிலர், நேற்று (27) சென்று பார்வையிட்டனர். இதன்போதே வைத்தியர்கள் மேற்கண்டவாறு தெரிவித்ததாக ஒன்றிணைந்த எதிரணி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.  தண்ணீரை மட்டுமே குடித்துக்கொண்டு, உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கு அவர் முயற்சித்தால், அவருடைய சிறுநீரகங்கள் மற்றும் குடல் ஆகியன, குணப்படுத்த முடியாத அளவுக்குப் பாதிப்படைந்துவிடும் என்றும் வைத்தியர்கள் தெரிவித்தனர்.  

தண்ணீரை மட்டும் பருகிக்கொண்டு, உடல் ஆரோக்கியத்தை நான்கு நாட்களுக்கு மட்டுமே பேணமுடியும். அதன் பின்னர், அவதானமான நிலைக்கு தள்ளப்பட்டுவிடும் என்றும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், உண்ணாவிரதம் இருக்கும் விமல் வீரவன்ச, மெதுவாகப் பேசுகின்றார் என்றும், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.