Jul 22

நாவலரின் கந்தபுராண வசனம் நல்லையில் மீளவும் வெளியீடு

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் கந்தபுராண வசனம் நூலை இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் மீளப்பதிப்பித்து  நல்லூா் கந்தசுவாமி கோவிலில் வெளியிட்டு வைத்தது. இந்து கலாசார அமைச்சா் கௌரவ டி.எம். சுவாமிநாதன் நுலை வெளியிட்டு வைத்தாா்.

கந்தபுராண கலாசாரம் மேலோங்கிய எங்கள் மண்ணின் பல்வேறு தரப்பினரிடையேயும் இந்த நூல் சென்றடைய வேண்டும் என்பதற்காக ( 800 ரூபா) மலிவு விலையில் இதனை வழங்குகின்றனா். நல்லூா் ஆலய வாயிலில் உள்ள நாவலா் மணிமண்டபத்தில் அலுவலக நேரத்தில் பெறமுடியும்.

மாணவர் இந்நூலை வாசிப்பதை ஊக்கப்படுத்துவதற்காக நூலை மையப்படுத்தி மாணவரிடையே போட்டி ஒன்றை நடத்தவிருப்பதாக திணைக்களப் பணிப்பாளா் திரு அ.உமாமகேஸ்வரன் தெரிவித்தாா். காலத்தின் தேவையுணா்ந்து இந்து கலாசார திணைக்களத்தினர் இந்த நிலை வெளியிட்டுள்ளனர்.