Mar 28

விமலுக்கு பிணை வழங்கவேண்டும் வாசு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு பிணை பெற்றுக்கொடுக்கவேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அரசாங்கமே அவரை இந்த நிலைக்கு ஆளாக்கியது என ஜனநாயக இடதுசாரி கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

சோசலிச மக்கள் முன்னணி இன்றுகொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.