Mar 28

அரசுக்கு எதிரான அடுத்த எழுச்சிப் பேரணி கிழக்கில்

நல்லாட்சி அரசாங்கத்துக்கு எதிரான கூட்டு எதிரணியின் அடுத்த எழுச்சிப்பேரணி கிழக்கு மாகாணத்தில் இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினரும் பிவித்துரு எல உறுமய அமைப்பின் தலைவருமான உதய கம்பன்பில தெரிவித்தார்.

தேசிய நூலக கேட்போர் கூடத்தில் இன்று  திங்கட்கிழமை  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே    அவர் இவ்வாறு  தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் பேரணியின் அடுத்த நகர்வானது எதிர்வரும் மே மாதம் கிழக்கு காணத்தின் அம்பாறை மற்றும் திருக்கோணமலை ஆகிய மாவட்டங்களில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது