Jun 27

கிளிநொச்சி இராணுவ ட்றக் விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்


இராணுவ ட்றக் வண்டி ஒன்று யாழ்தேவி ரயிலுடன் மோதி கிளிநொச்சி விபத்து தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. 

இராணுவத்தினரும் பொலிஸாரும் 2 விஷேட விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில் 5 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அத்துடன் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மற்றுமொரு இராணுவ வீரர் நேற்று இரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   

மேலும் மற்றுமொரு இராணுவ வீரர் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில்  சிகிச்சைப் பெற்று வருகிறார். 

கிளிநொச்சி மற்றும் முருகண்டி ரயில் நிலையங்களுக்கிடையில் ரயில் குறுக்கு பாதையில் நேற்று இந்த விபத்து இடம்பெற்றது