Mar 28

ஜனாதிபதியை சந்திப்பதற்கு சந்தர்ப்பம் கேட்டுள்ளேன்; மஹிந்த

நல்லாட்சி அரசாங்கம் தற்போது முன்னெடுத்துவரும் நிகழ்ச்சிநிரலை தொடர்ந்தும் முன்னெடுத்துச் சென்றால் நாட்டை மயானத்தற்கு கொண்டு செல்லும் நிலை உருவாகலாம்.

எனவே நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அவகாசம் கோரியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை  இன்று  சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்