Jun 26

குருநாகலில் வங்கிக் கட்டடத்திற்கு அருகில் குண்டு

குருநாகலில் சமூர்த்தி வங்கிக் கட்டடத்துக்கு அருகில் வெடி குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.



தும்மலசூரிய உடுபந்தாவ பிரதேச செயலக காணியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சமூர்த்தி வங்கி கட்டடத்துக்கு அருகில் வெடி குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்கள் துப்பரவு நடவடிக்கையில் ஈடுபட்ட போது வெடி குண்டை அவதானித்தனர்.

இது தொடர்பில் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டது. இராணுவத்தினர் மற்றும் வெடிகுண்டு கண்கானிப்பு பிரிவினர் அவ்விடத்துக்கு விரைந்து பாதுகாப்பாக வெடி குண்டை அகற்றினர் எனத் தெரிவிக்கப்படுகிறது.