Jun 26

46,673 தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது

என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் 79 ஆயிரம் மில்லியன் ரூபா கடன் வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 46 ஆயிரத்து 673 தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. 

அதிகமான கடன் சொந்துரு பியச வீடமைப்பு கடன் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்காக முன்னெடுக்கப்படும் ரன் அஸ்வென்ன மற்றும் கொவி நவோதா கடன் திட்டங்களுக்கு அதிக கேள்விகள் நிலவுவதாகவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 

ரவிபல சவி கடன் திட்டத்தின் கீழ் ஆயிரத்து 339 தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.