Jul 21

ஸ்காபரோவில் வீட்டின் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம்

ஸ்காபரோ பகுதியில் வீடு ஒன்றின் மீது துப்பர்ககிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அது குறித்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மக்கவன் வீதி மற்றும் எக்ளிங்டன் அவனியூ பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீதே, இரவு பத்து மணியளிவில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கெர்ளளப்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், குறித்த அந்த வீட்டின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு்ளளதையும், வீடு துப்பாக்கிக் குண்டினால் தாக்கப்பட்டுள்ளதையும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அந்த வீட்டின் கதவு ஊடாக துப்பர்கிச் சன்னங்க்ள் உட்பிரவேசித்துள்ளதாகவும், சம்பவ இடத்தில் வெற்றுத் தோட்டாக்கள் காணப்பட்டதாகவும் விசாரணையினை மேற்கொண்டுவரும் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

எனினும் இந்த சம்பவத்தின் போது எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும், சம்பவ இடத்திலிருந்து வெள்ளி நிற வாகனம் ஒன்று தப்பிச் சென்றமை அவதானிக்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில், சந்தேக நபர்கள் குறித்த விபரங்களையும் வெளியிடாத காவல்துறையினர், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.