Mar 28

ஜனாதிபதியின் கைகளில் காணிவிடுப்பு : அமைச்சர் ஜோன்

வடக்கு ,கிழக்கு காணி விடுவிப்பு தொடர்பான விடயங்கள் ஜனாதிபதியின் கைகளிலேயே உள்ளன. எவ்வாறாயினும் வடக்கு கிழக்கு பகுதிகளில் படையினர் வசமுள்ள காணிகள் படிப்படியாக விடுவிக்கப்படும் என காணி, சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.

பாதுகாப்பு படையினரின் கையிருப்பில் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி செயலணியே பிரதான செயற்பாடுகளை முன்னெடுக்கும் என்றும் அமைச்சர்  குறிப்பிட்டார்.

கொழும்பில் இன்று  நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட  அமைச்சரிடம் கேப்பாபுலவு மக்களின் காணி விடுவிப்பு போராட்டம் தொடர்பில் வினவிய போதே அமைச்சர் இவ்வாறுதெரிவித்தார்.