Mar 28

களுத்துறை தாக்குதல்; ஆயுதங்கள் மீட்பு

களுத்துறை சிறைச்சாலை பஸ் வண்டி மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு பாதாள உலக குழுவின் தலைவர் சமயங் உட்பட பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் ரீ 56 ரக துப்பாக்கியினையும் 48 தோட்டாக்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள வீடொன்றின் மூன்றாம் மாடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.