Jul 21

இன்டெக்ஸ் அக்வா லன்ஸ் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்

இந்தியாவில் இன்டெக்ஸ் நிறுவனத்தின் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இன்டெக்ஸ் நிறுவனம் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. அக்வா சீரிஸ்-இன் கீழ் அறிமுகமாகியுள்ள புதிய ஸ்மார்ட்போன் அக்வா லயன்ஸ் 3 என அழைக்கப்படுகிறது.

4ஜி வோல்ட்இ வசதி, ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் மற்றும் பலமொழிகளில் டைப் செய்ய உதவும் ஸ்விஃப்ட்கீ இன்டகிரேஷன் வசதியை கொண்டுள்ளது. ஆஃப்லைன் முறையில் விற்பனை செய்யப்பட இருக்கும் இன்டெக்ஸ் அக்வா லயன்ஸ் 3 ஷேம்பெயின் மற்றும் பிளாக் நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.    

இன்டெக்ஸ் அக்வா லயன்ஸ் 3 சிறப்பம்சங்கள்:

* 5.0 இன்ச் எச்.டி. ஐபிஎஸ் டிஸ்ப்ளே

* 2.5D வளைந்த டிராகன்டிரெயில் கிளாஸ்

* 1.25 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்

* 2 ஜிபி ரேம்

* 16 ஜிபி இன்டெர்னல் மெமரி

* 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்

* 8 எம்பி செல்ஃபி கேரா, எல்இடி பிலாஷ்

* 4000 எம்ஏஎச் பேட்டரி

* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

* வை-பை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஓ.டி.ஜி.

இன்டெக்ஸ் அக்வா லயன்ஸ் 3 ஸ்மார்ட்போன் கியூ.ஆர். கோடு, பழைய ஸ்மார்ட்போனில் இருந்து கான்டாக்ட், புகைப்படம், எஸ்எம்எஸ் மற்றும் இதர தகவல்களை புதிய இன்டெக்ஸ் ஸ்மார்ட்போனிற்கு பரிமாற்றம் செய்ய உதவும் சென்டர் ஆப் உள்ளிட்டவை இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது. 

இத்துடன் கானா, அமேசான் பிரைம் வீடியோ உள்ளிட்ட செயலிகளும் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஸ்விஃப்ட்கீ செயலியும் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளதால், ஸ்மார்ட்போனில் பல மொழிகளில் டைப் செய்யும் வசதி இடம்பெற்றுள்ளது. 

இந்தியாவில் புதிய இன்டெக்ஸ் அக்வா லயன்ஸ் 3 விலை ரூ.6,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.