Mar 28

அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பியே தீருவோம்; நான்கு அமைப்புக்கள் சூளுரை

நாட்டின் தற்போதைய  அரசாங்கத்தினர்  வளங்களை சீனாவிற்கும் இந்தியாவிற்கும் விற்பை செய்கின்றனர், மறுபுறத்தில் வடக்கு கிழக்கிலுள்ள இராணும் முடக்கி வைக்கப்பட்டுள்ளதால் புலிகளும் தமிழ் பிரிவினைவாத அமைப்புக்களும் மீண்டும் தலைதூக்கியுள்ளன.

எனவே தற்போதைய ஆட்சியாளர்களை வீட்டிற்கு அனுப்ப வேண்டிய அவசியம் தோன்றியுள்ளதை நாம் உணர்ந்துள்ளோம்.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் 15 பிக்குகள் சங்கங்களை  திரட்டிக்கொண்டு  தற்போதைய ஆட்சியாளர்களை வீட்டிற்கு அனுப்புவோம் என பொதுபல சேன, ராவணா பலய, சிங்கள ராவய, தாதியர் சங்கம் ஆகிய   அமைப்புக்கள் ஒருமித்து சூளுரைத்துள்ளன.  .

நாராஹேன்பிட்டி அபயராம விஹாரையில் இன்று இடம்பெற்ற மேற்படி  அமைப்புக்களை  சேர்ந்த பிக்குகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வமைப்புக்களின் பிரதிநிதிகள் மேற்கண்டவாறு சூளுரைத்தார்கள்.