Mar 28

கடலுக்கடியில் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தவேண்டியேற்படும் கம்மன்பில எச்சரிக்கை

தேர்தல்கள் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுமாயின் நாடளாவிய ரீதியில் அனைத்து அரச நிறுவனங்களும் முடங்கும் வகையிலான இரண்டாவது பாரிய ர்த்தாலினை இவ்வருடத்துக்குள் அரசாங்கம் எதிர்கொள்ள நேரிடும் என தூய்மையான   ஹெல உறுமய எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்தகையதொரு சந்தர்ப்பத்தில் நல்லாட்சி ரசாங்கம் தமது அமைச்சரவை கூட்டத்தை கடலுக்கடியிலேயே நடத்த வேண்டியேற்படும் எனவும் பாராளுமன்ற உறுப்பினரும்  அமைப்பின் தலைவருமான உதய கம்பன்பில தெரிவித்தார்.  

தேசிய நூலக கேட்போர் கூடத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.