Jul 21

NAFTA பேச்சுக்கள் விரைவில் இடம்பெறவேண்டும்

கனடா, அமெரிக்கா, மெக்சிக்கோ இடையேயான NAFTA எனப்படும் வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்படிக்கை தொடர்பிலான மறுபேச்சுக்கள் விரைவில் இடம்பெற வேண்டும் என்றும், அதனை விரைவில் நடாத்துவதற்கான கடுமையான முயற்சியில் தான் ஈடுபட்டுள்ளதாகவும் அமெரிக்காவுக்கான கனேடிய தூதர் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் எட்மண்டனில் ஆரம்பமான கனடாவின் மாநில முதல்வர்களுக்கான மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

குறித்த அந்த வர்த்தக இணக்கப்பாடு தொடர்பிலான பேச்சுக்களை விரைவில் நடாத்தி முடிக்கவேண்டும் என்று ஆர்வம் காட்டுகின்ற போதிலும், அந்தப் பேச்சுகளின்போது பாதகமான முடிவுகள் எட்டப்படுவதை கனடா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது ஏற்பட்டுள்ள தேக்கநிலை காரணமாக கனடாவின் வர்த்தகர்கள் மற்றும மாநிலங்கள் முதலீடுகளை மேற்கொள்வதில் உறுதியற்ற தன்மை காரணப்படுவதனை தாம் அறிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இநத் விடயத்தில் தாமதங்களை அனுமதிப்பதைக் காடடிலும், விரைவில் பேச்சுக்களை நடாத்தி ஒரு முடிவுக்கு வரவேண்டிய தேவை உள்ளது என்ற போதிலும், அவசரம் காரணமாக பாதகமான முடிவுகளை எட்டுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே கனேடியர்களுக்கு நனமை பயக்கும் தீர்மானங்களை எட்டுவதை நோக்கமாக கொண்டே, குறித்த இந்த விவகாரம் தொடர்பிலான பேச்சவார்த்தை மேசைக்கு செல்வதுற்கு கனடா தயாராக உள்ளதாகவும் அவர் விபரித்துள்ளார்.