Mar 28

இலங்கை வருகிறது ஐ.ஒ. முதலீட்டு வங்கியின் உயர்மட்டக் குழு

ஐரோப்பிய முதலீட்டு வங்கியின்  உயர் மட்ட பிரதிநிதிகள் குழுவொன்று இவ்வார இறுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு  பொருளாதார நிலைமைகளை  ஆராயவுள்ளது.

 தெற்காசிய பிராந்தியத்திற்கான விஜயத்தின் ஆரம்ப  கட்டமாகவே  இலங்கைக்கு  ஐரோப்பிய முதலீட்டு  வங்கியின் உயர்மட்ட தூதுக்குழுவினர்  வருகை தரவுள்ளனர்.

புதிதாக நியமிக்கப்பட்ட ஐரோப்பிய முதலீட்டு வங்கியின்  உதவித் தலைவர் அன்ரூ மக்டோவெல்  (தெற்காசியாவுக்கு பொறுப்பானவர்) தலைமையிலான  குழுவினரே இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு  ஐரோப்பிய ஒன்றியத்துடனான தற்போதைய ஈடுபாடுகள் தொடர்பில் ஆராயவுள்ளதுடன்  எதிர்கால முதலீடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடவுள்ளனர்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள், வர்த்தக தலைவர்கள்,    இராஜதந்திர  சமுகத்தின் பிரதிநிதிகள்,  உள்ளக மற்றும் சர்வதேச நிதி  நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோருடன்  ஐரோப்பிய ஒன்றியத்தின் முதலீட்டு வங்கி குழுவினர்  கலந்துரையாடல்களை நடத்தவுள்ளனர்.