Mar 28

மேல் நீதிமன்றத்தில் ஆவணங்கள் கொள்ளை

பலபிடிய மேல் நீதிமன்றத்தில் வழக்கு ஆவணங்கள்  கொள்ளையிடப்பட்டுள்ளன.   இந்தச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


பலபிடிய அம்பலன்கொடை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டொன்றுக்கு  அமைவாகவே  இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


பலபிடிய மேல் நீதிமன்றத்தில் வழக்கு அறிக்கைகள் வைக்கப்பட்டிருந்த அறையில் நேற்று இரவு நுழைந்த அடையாளம் தெரியாத  குழுவொன்று அங்கிருந்த வழக்கு ஆவணங்கள் சிலவற்றை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.