Mar 28

அமைச்சரவை மறுசீரமைப்பு; ஜனாதிபதி முடிவு

அமைச்சரவையில் இம்மாத இறுதிக்குள் அல்லது அடுத்த மாத இறுதிக்குள் மாற்றத்தை ஏற்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

இம்மாற்றத்தின் போது வெளிவிவகார அமைச்சு மற்றும் நிதியமைச்சில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படலாம் என்று தெரியவருகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரஷ்யாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்வதற்கு முன்பதாகவே அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.   

இது தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஜனாதிபதி பலசுற்றுப் பேச்சுகளை நடத்தியுள்ளார்.இதன் போது ஐ.தே.கட்சி மற்றும் சுதந்திரக் கட்சியைச் சார்ந்த சில அமைச்சர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

அடுத்த மாதம் முடிவடைவதற்குள் அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. அமைச்சரவையில் சில அமைச்சர்கள் தமது கடமைகளை சரிவரச் செய்வதில்லையென்ற பல முறைபாடுகளை சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த சில அமைச்சர்கள் ஜனாதிபதியிடம்   முன்வைத்திருப்பதாகவும் தெரியவருகிறது.