Mar 28

ரஷ்ய அரசுக்கு எதிராக போராட்டம் எதிர்க்கட்சித்தலைவர் உட்பட பலர் கைது

ரஷ்யாவில் ஊழல் அதிகரித்துள்ளதன் காரணத்தால் பிரதமர் பதவியில் இருந்து டிமிட்ரி மெத்வதேவ் பதவி விலக வேண்டும் என்பதை வலியுத்தி எதிர்க்கட்சி போராட்டம் அறிவித்தது.

ரஷ்யாவின்  99 நகரங்களில்  எதிர்ப்பு போராட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 72 நகரங்களில் போராட்டம் நடத்துவதற்கு அரசாங்கத்தினால் அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை.

இவ்வாறான நெருக்கடிக்குள்ளும் ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் நடைபெற்ற மாபெரும எதிர்ப்பு  போராட்டத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி தலைமை தாங்கினார்.

பாரியளவிலான மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டமையினால் அங்கு பதட்டம் அதிகரிக்கவும் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சிநவால்னி உள்பட 800 பேர் கைது செய்யப்பட்டனர்.

மொஸ்கோ தவிர முக்கிய நகரங்களான செயின்ட் பீட்டர்ஸ் பார்க், விலாடி வோஸ்டோக், நவோசி பிரிஸ்க், டாமஸ்க், உள்ளிட்ட நகரங்களில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பங்கேற்றவர்களும் கைது செய்யப்பட்டனர்.