Jun 18

தீவுப் பகுதியில் கற்றாளை பிடுங்கிய முஸ்லீம் இளைஞர்கள் இருவர் கைது!

வடதமிழீழம்: யாழ்.தீவகம் மண்கும்பான் பகுதியில் கற்றாளை பிடுங்கிக் கொண்டிருந்த முஸ்லிம் இளைஞா்கள் இருவா் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனா்.


யாழ்.தீவக பகுதிகளில் இருந்து பெருமளவு கற்றாளை திருடப்படும் நிலையில் கற்றாளை பிடுங்குவது அந்த பகுதிகளில் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தடையை மீறி பெருமளவு கற்றாளைகளை பிடுங்கிக் கொண்டு வெளியேற முயற்சித்த இரு இளைஞா்களை மண்டைதீவு காவல்துறை காவலரண் பொறுப்பதிகாாி விவேகானந்தராஜ் தலமையிலான காவல்துறை குழு கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவா்கள் ஊா்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப் பட்டிருக்கின்றனா்