Jun 18

மரங்களிற்கிடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 30 கிலோ கஞ்சா மீட்பு

வடதமிழீழம்: யாழ்ப்­பா­ணம், வல்­வெட்­டித்­துறை, கெரு­டா­விலில் நேற்­றுக் காலை 30 கிலோ கஞ்சா கைப்­பற்­றப்­பட்­டது. காணி உரி­மை­யா­ளர் கொடுத்த தக­வ­லின் அடிப்­ப­டை­யில் வல்­வெட்­டித்­து­றைப் காவல்துறையினர் கஞ்­சாவை மீட்­டுள்­ள­னர்.

வெற்­றுத் தோட்­டக் காணி­யில் மரங்­க­ளுக்கு இடையே பொதி­யொன்று மறைத்து வைக்­கப்­பட்­டி­ருப்­ப­தைக் காணி உரி­மை­யா­ளர் கண்­டுள்­ளார்.

அதை­ய­டுத்து அவர் வல்­வெட்­டித்­து­றைப் காவல்துறையினருக்­குத் தக­வல் வழங்­கி­யுள்­ளார். காவல்துறையினர் சம்­பவ இடத்­துக்­குச் சென்று விசா­ரணை நடத்­தி­னர். 15 பொதி­க­ளா­கப் பொதி செய்­யப்­பட்ட 30 கிலோ கஞ்சா கைப்­பற்­றப்­பட்­டது.