Jun 17

தேசிய சேவை முன்னோட்ட திட்டம் பிரான்ஸில் அறிமுகம்!

தேசிய சேவை முன்னோட்ட திட்டம் பிரான்ஸில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களிடையே ஒற்றுமை உணர்வை ஊக்குவிக்கும் நோக்கிலேயே இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது.

2,000 தொண்டு நிறுவன ஊழியர்கள் குறித்த திட்டத்தில் பங்கேற்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பங்கேற்கும் அனைவருக்கும் சீருடை வழங்கப்படும். தேசிய கீதத்துடன் அவர்களது நாள் தொடங்கும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

15, 16 வயது இளையர்களிடையே தேசிய ஒற்றுமையை வலுப்படுத்த குறித்த திட்டம் உதவும் எனவும் பிரான்ஸ் அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.