Mar 28

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டு

இங்கிலாந்து நடிகையான எமா தொம்ப்சன் (வயது 57)  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புக்கு எதிராக பாலியல் குற்றசாட்டை சுமத்தியுள்ளார்.

எமா தொம்ப்சன் தனது கணவர் கென்னத் பிரனாக் என்பவரை விவாகரத்து செய்திருந்த நிலையில் 1998ஆம் ஆண்டு இவர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பிரை மெரி டவர்ஸ் என்ற படத்தில் நடித்து கொண்டிருந்தபோது  தனது கணவர் கென்னத் பிரனாக் என்பவரை விவாகரத்து செய்து இருந்தார்.

அப்போது அமெரிக்காவின் புகழ்பெற்ற வர்த்தகராக இருந்த டிரம்ப் ஒரு நாள்  தொலைபேசியூடாக, ஒரு நாள் தன்னுடன் டேட்டிங்கிற்;கும் விருந்துக்கும் வருமாறு அழைத்தார். நியூயார்க்கில் உள்ள டிரம்ப் டவரில் அதற்கான ஏற்பாடு செய்து இருப்பதாக கூறியுள்ளார்.

இத்தகவலை சமீபத்தில் பங்கேற்ற சுவீடன் தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சியின் போது நடிகை எம்மா கூறினார். அவரது அழைப்பு தனக்கு வியப்பையும் ஆச்சரியத்தையும் அளித்ததாகவும் கூறினார். 

அப்போது டிரம்ப் தனது 2ஆவது மனைவி மரியா மாப்ளசை விவாகரத்து செய்து தனிமையில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.