Jun 17

இருவரின் உயிரை பறித்த கள்ளக் காதல்


பக்கமுன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யாய 4 பகுதியில் பெண் ஒருவரை தாக்கி கொலை செய்துவிட்டு நபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

உயிரிழந்த இருவரும் வேறு நபர்களுடன் திருமணமானவர்கள் எனவும் குறித்த இருவரும் கள்ள தொடர்பு வைத்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இதன்போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் காரணமாக குறித்த பெண்ணை கொலை செய்து விட்டு கொலை செய்த நபரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

பக்கமுன பகுதியை சேர்ந்த 42 வயதுடைய பெண்ணும் 35 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். 

சம்பவம் தொடர்பில் பக்கமுன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.