Jun 16

மூன்று நாட்களாக காணாமல் போயிருந்த மாணவி சடலமாக மீட்பு!


மூன்று நாட்களாக காணாமல் போயிருந்த பதுளை பகுதியில் உள்ள பிரபல பாடசாலை மாணவி ஒருவரின் சடலம் இன்று காலை 7.30 மணியளவில் லொங்கல்ல நீர்தோக்கத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

பதுளை, மெத பத்தன பகுதியை சேர்ந்த 19 வயதுடைய லக்ஷிகா மதுவந்தி என்ற மாணவியின் சடலமே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 14 ஆம் திகதி குறித்த மாணவி காணாமல் போயிருந்ததாக பொலிஸாரிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கந்தகெட்டிய பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து மேற்கொண்ட தேடுதலின் போது குறித்த மாணவியின் பொருட்கள் சில லொங்கல்ல நீர்தேக்கத்திற்கு அருகில் உள்ள புதர் ஒன்றிற்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. 

அதனடிப்படையில் லொங்கல்ல நீர்தேக்கத்தில் தேடுதல் நடவடிக்கையை பொலிஸார் இன்று குறித்த மாணவியின் சடலத்தை கண்டுபிடித்துள்ளனர். 

குறித்த பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளாரா அல்லது கொலையா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.